கமல்,ரஜினி அரசியல் பயணம் சாத்தியமா?

கமல் தனிக்கட்சி துவங்குவார் என சமீபத்தில் செய்திகள் வந்த நிலையில், அதுப்பற்றி கமல் ஒரு பேட்டியில் பேசும்போது ‘எந்த கட்சியும் என் கொள்கைகளுக்கு ஒத்துவராது என்பதால் தனி கட்சி துவங்குவது தவிர வழியில்லை’ என கூறினார்.

இந்நிலையில் ஒரு பத்திரிகை விழாவில் பேசிய கமல்ஹாசன், மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார் என தெரிவித்தார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, கொள்கை ஒத்துப்போகும் பட்சத்தில் இணைந்து பணியாற்ற தயார் எனவும் கமல் கூறியுள்ளார்.

அதனால் ரஜினி-கமல் இருவரும் இணைந்து ஒரு அரசியல் கட்சி துவங்குவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Design a site like this with WordPress.com
Get started